தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் முடிவு… 17-ம் தேதி இறுதி பட்டியல் வெளியீடு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதியின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்தது. ஆனால், சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 5.43 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், ஒரே அடியாக 97.37 லட்சம் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை பெயர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் 17.10 லட்சம் பேர் புதிய சேர்க்கைக்காகவும், 5.51 லட்சம் பேர் திருத்தத்திற்காகவும், 1.84 லட்சம் பேர் நீக்கத்திற்காகவும் விண்ணப்பித்தனர்.

அதோடு, ஆன்லைன் வழியாக மட்டும் 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்ததால், மொத்த விண்ணப்பங்கள் 34.75 லட்சத்தை எட்டின.நீக்கப்பட்ட 97.37 லட்சம் பேரில், 26.95 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும், 66.44 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் அல்லது அந்த முகவரியில் வசிக்காதவர்கள் என்றும், 3.98 லட்சம் பேர் இரட்டை பதிவுகள் கொண்டவர்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், ‘இடம்பெயர்ந்தவர்கள்’ எனக் கணக்கிடப்பட்ட 66 லட்சம் பேரில், இதுவரை வெறும் 22.70 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருப்பது தேர்தல் அதிகாரிகளை சிந்திக்க வைத்துள்ளது. இதன் பொருள், சுமார் 44 லட்சம் பேர் இன்னும் பட்டியலில் இடம்பெறவில்லை.

இவர்களில் பலர் இரட்டை வாக்காளர் பதிவுகள் வைத்திருக்கலாம் என்றே தேர்தல் ஆணையம் சந்தேகிக்கிறது.இந்த அனைத்து சரிபார்ப்பு பணிகளும் இன்று நிறைவடையும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

திருத்தப்பட்ட கணக்குப்படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.65 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாக்காளர் பட்டியலில் பெரிய சுத்திகரிப்பு… தேர்தல் அரசியலில் புதிய கணக்குகள்!’ என்று இந்த மாற்றங்கள் அரசியல் வட்டாரங்களில் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voter list Tamil Nadu ends Final list released 17th


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->