விருதுநகர்: 28 வயது பெண், 19 வயது இளம்பெண் மாயம்.. காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த இளம்பெண் மற்றும் 19 வயது இளம்பெண் என 2 பேர் விருதுநகர் மாவட்டத்தில் மாயமாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் எம். சுப்பையாபுரம் பகுதியை சார்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 29). ஒடிசா மாநிலத்தை சார்ந்த ரஞ்சித், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இதன்போது, இவருக்கு தேனி மாவட்டத்தை சார்ந்த மல்லிகா (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தம்பதிகள் இருவரும் சுப்பையாபுரத்தில் உள்ள ஆலையில் பணியாற்றி வருகின்றனர். 

மல்லிகா அடிக்கடி அலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை ரஞ்சித்குமார் கண்டிக்கவே, சம்பவத்தன்றும் தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதுகுறித்து சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனைப்போல, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சார்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் வைஷ்ணவி (வயது 19). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மகளை கண்டறிந்துதரக்கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வைஷ்ணவியை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sathur and Srivilliputhur Married and Unmarried Woman Missing Police Investigation


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal