செஞ்சி தாசில்தார் வாகனம் மோதி, 10 ஆம் வகுப்பு மாணவி பலி.. உறவினர்கள் கண்ணீருடன் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


செஞ்சி தாசில்தார் இயக்கி வந்த வாகனம் மோதி சாலையோரம் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவி பலியான சோகம் அரங்கேறியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குணசேகரன். இவரது மகள் மணிமேகலை. மணிமேகலை பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், தனது வயலுக்கு செல்வதற்காக செஞ்சி பகுதியில் உள்ள சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளார். 

இதன்போது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த செஞ்சி வட்டாட்சியர் ராஜனின் வாகனம், மாணவியின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து, செஞ்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மணிமேகலை, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதி செய்யப்பட்டார். 

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக அனந்தபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வாகனத்தை இயக்கி வந்த செஞ்சி தாசில்தார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், செஞ்சி தாசில்தார் மீது துறை ரீதியாக ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி உறவினர்கள் செஞ்சி - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், வாகனத்தை இயக்கி வந்த தாசில்தாரிடம் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில், சிறுமியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viluppuram Gingee Revenue RTO Rajan Vehicle hit School Student girl and She is Died 29 April 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->