பார்க்காமலே காதல்.. பார்க்கும் போது விழுந்த இடி.! செஞ்சி அருகே அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் அருகே அரசு கல்லூரி ஒன்றில் பாரதி என்ற பெண் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு செஞ்சி பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் என்பவருடன் பேஸ்புக் மூலமாக அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

நந்தகோபால் தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்வதாக வாக்களித்து ஆசையை துண்டியுள்ளார். இதனை நம்பிய பாரதியும் நேரில் சந்திக்காமலேயே சமூக வலைதளம் மூலம் பழகியிருக்கிறார். 

நந்தகோபால் கேட்கும் போதெல்லாம் 2 லட்சம் ரூபாய் வரை google.pay மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருபதாயிரம் ரூபாய் அவசரமாக தேவை என்றும் இல்லை எனில் தற்கொலை செய்து கொல்வேன் என்றும் நந்தகோபால் மிரட்டல் விடுத்திருக்கிறார். 

இதனால் பயந்துபோன பாரதி தனது தந்தையிடம் கூற உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villupuram men cheated young college girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal