இளைஞர்களே ரெடியா.. தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஏவிஎம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

மேலும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 250க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அதன்படி இந்த வேலை வாய்ப்பு முகாம் விருதாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாம்களை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram, dindugal, Cuddalore employment camp today


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->