மதுரையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்.. 3 பேர் கைது..!!
vilangulam worker death issue
மதுரை மாவட்டம் விளாங்குளம் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த நிலை, திடீரென ஏற்பட்ட மண்சரிவில் ஈரோட்டை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் சதிஷ் சிக்கிக்கொண்டார்.
மண்சரிவில் சிக்கி கொண்டது சதீஷை மீட்க பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீட்கும் முயற்சி மேற்கொண்டபோது சதீஷின் தலை துண்டிக்கப்பட்ட தகவல்கள் வெளியானது. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சதிஷ் உடலை போராடி மீட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

மேலும் அந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாநகராட்சி மேயர் இந்திராணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மதுரையில் பள்ளம் தோண்டும்போது மண்சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில், நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவன உரிமையாளர், மேலாளர், பணியிட பொறியாளர், பொக்லைன் ஓட்டுநர் ஆகிய நால்வர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் ஒப்பந்த பொறியாளர் சிக்கந்தர், கண்காணிப்பாளர் பாலு, ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
vilangulam worker death issue