மறைந்த விஜயகாந்த்: தீவுத்திடலில் குவிந்த பொதுமக்கள்!
Vijayakanth body in island
நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் (வயது 71) உடல் நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4:45 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கிடையே விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவு திடலில் வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ராஜாஜி அரங்கில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவு திடலில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினரின் அனுமதி பெற்று அவரது உடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசு, கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட உடனடியாக இடம் ஒதுக்கி அவருக்கான மரியாதை செலுத்தவும் முன் வர வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழக பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vijayakanth body in island