நிகிதா பெயரில் எனது புகைப்படத்தை பரப்புகிறார்கள் - அதிரவைத்த பாஜக நிர்வாகி.!!
bjp women excuetive petition against spreading my photo in nikitha name
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் மீது நிகிதா என்ற பெண் நகை திருடப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று, கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதையடுத்து போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-gdclr.png)
இந்த நிலையில் நிகிதா பெயரில் தனது புகைப்படம் பரப்பப்படுவதாக திருவள்ளூர் கிழக்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "என் பெயர் ராஜினி. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளேன்.
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்தான் நிகிதா. என் மண் என் மக்கள் யாத்திரைக்காக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிகிதாவுடன் புகைப்படத்துடன் இணைத்து பேசுகிறார்கள்.
சமூக வலைதளத்திலும், ஊடகத்திலும் தவறாக செய்தி பரப்புகிறார்கள். இதை கொண்டுபோனது செந்தில் சரவணன் என்பவர். பேஸ்புக், டுவிட்டரில் அவர் ID தான் வெளிவருகிறது. சில செய்திகளையும் வெளியிட்டு உள்ளனர்.
இது குறித்து அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது என்னுடைய புகைப்படம். அண்ணாமலை என் அண்ணா. அவரை முன்னிறுத்தி தான் நாங்கள் உள்ளேயே வந்தோம். ஆனா அந்த போட்டோவை வைத்து இந்த மாதிரி அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
இது ஒரு லேடீசை கலங்கப்படுத்தியதுபோல் இல்லை. எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வேற லெவலில் போராட்டம் நடத்துவோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
bjp women excuetive petition against spreading my photo in nikitha name