விஜய் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும்... விஜய் அரசியலில் இன்னும் வளரவில்லை- சரத்குமார்
Vijay should speak very carefully Vijay has not yet matured in politics Sarathkumar
மதுரையில் நேற்று த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த அந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர், “நாமும் பா.ஜ.கவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்? அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா? ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இடம் அடிபணிந்து கொண்டும், இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது” என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து, இன்று நெல்லையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்க தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர்-அரசியல்வாதி சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிகர் விஜய் அரசியலில் இன்னும் வளரவில்லை. எதைப் பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எந்த நோக்கில் பேசுகிறோம் என்பதை கவனமாகச் சொல்ல வேண்டும்” என்று விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.
விஜயின் கடும் விமர்சனத்திற்குப் பின்னர் சரத்குமார் அளித்த இந்தக் கருத்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Vijay should speak very carefully Vijay has not yet matured in politics Sarathkumar