விஜய் – எடப்பாடி ரகசிய பேச்சு! பஞ்சாயத்து பேசிய பவன் கல்யாண்.. விஜய்க்கு போனைப் போட்ட எடப்பாடி? அதிமுகவுடன் கூட்டணியா?
Vijay Edappadi secret talk Pawan Kalyan spoke in the panchayat Edappadi called Vijay Alliance with AIADMK
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் அரசியல் ரீதியாகவும் புதிய அலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, திமுக அரசு இந்த விவகாரத்தில் விஜயின் தலைமையைக் குறிவைத்து விமர்சனம் செய்ததோடு, சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. மறுபுறம், அதிமுக மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
இதன் நடுவில், அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி,இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.எடப்பாடி, இந்த துயரச் சம்பவத்தில் விஜய்க்கு தனது முழு ஆதரவையும் உறுதிபடுத்தியதாக கூறப்படுகிறது.மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான கூட்டணி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது.
ஆனால் விஜய்,“முதலில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது தான் எனது கடமை. கூட்டணி குறித்து பிறகு பேசிக் கொள்ளலாம்”என்று பதிலளித்ததாக தகவல் தெரிவிக்கிறது.
அரசியல் பார்வையாளர்கள் கூறுவதாவது:தற்போதைய சூழலில் திமுக தொடர்ந்து விஜயை குறிவைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில், அதிமுக மற்றும் பாஜக விஜயை அரவணைக்கும் முயற்சியில் உள்ளன.
திமுக மீது தொடர்ந்து விமர்சன குரல் கொடுக்கும் விஜய், தனது பேச்சுகளில் அதிமுகவை அதிகம் குறைசொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.இதனால், விஜய் எதிர்காலத்தில் அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கின்றனர்.
இதற்கிடையில், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
வட்டார தகவலின்படி,“விஜய்க்கு தற்போதைய சூழலில் கூட்டணியின் ஆதரவும் மூத்த தலைவர்களின் ஆலோசனையும் தேவைப்படுகிறது. திமுகவுக்கு எதிராக வலுவான சக்தியாக இருக்க, அதிமுக உடன் இணைந்து செல்வது நல்லது”என்று பவன் கல்யாண் விஜயிடம் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,“கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடுவையும் பாஜகவையும் விமர்சித்த நான் கூட இன்று அவர்களுடன் கூட்டணி சேர்ந்து துணை முதலமைச்சராக இருக்கிறேன். அரசியலில் தற்காலிக முடிவுகள் முக்கியம்”என்று பவன் கல்யாண் விஜயிடம் எடுத்துக்கூறியதாகக் கூறப்படுகிறது.
கரூர் பேரழிவு பிந்தைய சூழ்நிலை தமிழ்நாட்டின் அரசியல் வரையறையை மாற்றக்கூடியதாக மாறியுள்ளது.
விஜய் – எடப்பாடி இணைப்பு சாத்தியமான நிலையில், பவன் கல்யாணின் தலையீடு இந்த கூட்டணியை உறுதி செய்யக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
Vijay Edappadi secret talk Pawan Kalyan spoke in the panchayat Edappadi called Vijay Alliance with AIADMK