பிஞ்சு குழந்தை ஆசை, வெடித்து சிதறி பலியான சோகம்.. வேப்பூரில் பரிதாபம்..! 
                                    
                                    
                                   veppur child death 
 
                                 
                               
                                
                                      
                                            கடலூர் மாவட்டம் வேப்பூர் வரம்பனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி சரவணன் - அஞ்சலையம்மாள். இவர்களின் மகள் கார்த்திகா (வயது 5). வெளிநாட்டில் தங்கி சரவணன் வேலை பார்த்து வருகிறார். அஞ்சலையம்மாள் சொந்த ஊரில் இருக்கிறார். 
அஞ்சலையம்மாள் சம்பவம் நடைபெற்ற போது, மகளை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்கு சென்றுவிட்டார். அப்போது கார்த்திகா தீபாவளிக்கு வாங்கிய வெடிபொருட்களை திறந்து, மத்தாப்பு தீக்குச்சியை பற்ற வைத்து இருக்கிறார். இந்நிலையில், பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டுள்ளது. 
பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதற, இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி செய்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் சென்றும் பலனில்லாது பரிதாபமாக சிறுமி கார்த்திகா உயிரிழந்தார். இது தொடர்பாக வேப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.