மறியலில் ஈடுபட்டவர்கள் கைது.! காவல்துறை அதிரடி நடவடிக்கையால் பதற்றம்.!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்கின்றார். 

அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர் சங்க தலைவர் சரவனராஜ் துவங்கி வைத்து இருக்கின்றார். மேலும் பல்வேறு அரசு ஊழியர்கள் இதில் கலந்து கொண்டு இருக்கின்றனர். 

இதில், கலந்து கொண்ட ஊழியர்கள், "காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், முழுநேர அரசு ஊழியராக தங்களை நியமிக்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும், அத்துடன் சட்டரீதியான எங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்." என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். மேலும், இந்த கைது நடவடிக்கையால் அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore sathunavu staffs strike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal