வெள்ளத்தில் தத்தளிக்கும் வேலூர்.. மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டு இருந்த நிவர் புயலானது, புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதனைத்தொடர்ந்து வடமேற்கு திசையில் நிவர் பயணம் செய்ததை அடுத்து, வேலூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் மழை பெய்தது. விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையை தொடர்ந்து, அம்மாவட்டத்தில் மழை 38 செ.மீ பெய்துள்ளதாக அளவீடுகள் தெரிவித்தது. 

இதனைப்போன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. சாலையோரம் இருந்த தென்னை மரங்கள் அனைத்தும் தலைவிரித்து ஆட, கடந்த இரண்டு நாட்களுக்குள் மொத்தமாக 67 செ.மீ மழையளவு பதிவானது. அதிகட்சமாக பொன்னை பகுதியில் 16 செ.மீ மழை பெய்திருந்தது.

இதனால் வேலூரில் உள்ள பிரதான சாலைகளான அண்ணாசாலை, காட்பாடி சாலை, ஆற்காடு, ஆரணி, பெங்களூர், சத்துவாச்சாரி சாலை என பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. கன்சால்பேட்டை, இந்திரா நகர், சம்பத் நகர், காட்பாடி பகுதியிலும் 200 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

அங்குள்ள அணைக்கட்டு இலவம்பாடி பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக மரம் சாய்ந்து விழுந்ததில் ஓட்டுனரின் சுதாரிப்பால் 4 பேரும் உயிர் தப்பினர். ஜவ்வாது மலையில் உருவாகி மேல் அரசம்பட்டு வழியாக அகரம் உத்திரகாவேரி ஆறு கடந்த 3 வருடமாக வறண்டு இருந்த நிலையில், நிவர் புயலால் திடீர் வெள்ளத்தை கண்டது. ஆற்றின் இருகரையை தொட்டவாறு மழை நீர் சென்றது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், அப்பகுதிக்கு விரைத்து சென்று தடுப்பணையை பார்வையிட்டார். பின்னர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தினார். மாங்காய் மண்டி அருகேயுள்ள திடீர் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துகொண்டதை தொடர்ந்து, மீட்பு படையினர் உதவியுடன் படகுகள் மூலமாக 200 க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore Peoples Lag Struggled Heavy Rain Flood Nivar Cyclone


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->