பாகிஸ்தான் பலூசிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
17 terrorists shot dead in Balochistan
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், 17 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
பலூசிஸ்தானின் கோலு, கலாட் மற்றும் பஞ்ச்கூர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த இரு தினங்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டையில், பஞ்ச்கூர் மாவட்டத்தில் 04 பயங்கரவாதிகளும், கோலுவில் 05 பயங்கரவாதிகளும், கலாட் மாவட்டத்தில் 08 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
English Summary
17 terrorists shot dead in Balochistan