உதவி பேராசிரியர் தேர்வு தாளில் திமுக அரசு மறைமுக தேர்தல் பிரச்சாரமா..? - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சார்பில் அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (டிசம்பர் 27) நடத்தப்பட்டது. 

2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, 195 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், 42,000 பேர் தேர்வு எழுதினர்.

இன்று காலை, மதியம் என இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் காலை கொள்குறி தேர்வு, மதியம் விரிவான விடை எழுதும் தேர்வு நடத்தப்பட்டன. அதன் பின்னர், மதியம் நடந்த தேர்வில், திமுக அரசின் திட்டங்களின் நோக்கம் மற்றும் தாக்கங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த தேர்வு தாளில் கேட்கப்பட்ட கேள்வி பின்வருமாறு:

 

* இல்லம் தேடிக் கல்வி (10 மதிப்பெண்கள்)
* நான் முதல்வன் திட்டம் (10 மதிப்பெண்கள்)
* முதல்வரின் காலை உணவுத் திட்டம் (10 மதிப்பெண்கள்)
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (10 மதிப்பெண்கள்)
* முதல்வரின் காக்கும் கரங்கள் (10 மதிப்பெண்கள்)

தற்போது இந்த வினா இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக அரசு ஓசியில் தேர்தல் பிரசாரம் செய்வதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the DMK government using the assistant professor recruitment exam paper for indirect election campaigning


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->