வேலூர்: பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மாணவி பலி! பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரிதாபகரமான விபத்தில், பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய சிறுமி அதே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரதராமி அருகே உள்ள வரதாரெட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜெயச்சந்திரன் மற்றும் மேனகா தம்பதியின் மகள் கீர்த்திஷா (4), அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தாள். புதன்கிழமை மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்ததும், பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிய கீர்த்திஷா, தன் வீட்டுக்கு அருகில் பேருந்து நின்றபோது இறங்க முயன்றாள்.

அப்போது இழந்து கீழே விழுந்த சிறுமி, பேருந்து பின்சக்கரத்துக்குள் சிக்கி இடத்திலேயே உயிரிழந்தாள். சம்பவத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, பேருந்து ஓட்டுநரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

தகவல் அறிந்ததும், பரதராமி போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் சில மணி நேரங்களிலேயே இழந்த துயரத்தில் துவண்டு கிடக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பேருந்து பாதுகாப்பு குறித்து கடும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த விபத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellore kudiyatham school van accident student death


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->