உறங்கும் இடம் பிடிப்பதில் தகராறு.. யாசகம் பெற்று பிழைப்பு நடத்தியவர்கள் சண்டையில் ஒருவர் பலி.!
Vellore Katpadi Bus Stand 2 Beggars Fight to Sleeping Place Finally 1 Murdered by Another One
யாசகம் பெற்று பிழைப்பு நடத்திய 2 பேரிடம், உறங்குவதற்கு இடம்பிடிக்க ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காவல் நிலையத்திற்கு அருகேயிக்கும் பேருந்து நிறுத்தத்தில், அடையாளம் தெரியாத யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தவர் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காட்பாடி காவல் துறையினர், இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் இரவில் உறங்கும் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட இடம் பிடிக்கும் தகராறில் கொலை நடந்தது உறுதியானது.
இதனையடுத்து, ஒருவரை கொலை செய்து தலைமறைவாக உள்ள நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர் கைதான பின்னரே உயிரிழந்த நபரின் விபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Vellore Katpadi Bus Stand 2 Beggars Fight to Sleeping Place Finally 1 Murdered by Another One