சாதிவெறி பிடித்த திமுக நிர்வாகிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும் - விசிக கண்டன போஸ்டர்!
Vellore anaikattu DMK vs VCK Poster
வேலூர் அருகே சாதியை சொல்லி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று, விசிக கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாருக்கும், அணைக்கட்டு தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ஏரி புதூர் வெங்கடேசன், துணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கெங்கநல்லூர் கவுன்சிலர் மகாலிங்கம் ஆகியோருக்கும் இடையே மணல் கடத்தல் விசாகரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 13-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், தி.மு.க. பிரமுகரான வெங்கடேசன், மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் ஏரியில் மணல் எடுத்ததை நான் தடுத்ததால், என் சாதி பெயரை சொல்லி திட்டி, என்னை கொன்று ஏரியில் புதைப்பதாக மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, திமுக நிர்வாகிகள் தரப்பில், கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அணைக்கட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், செந்தில் குமாரை, சாதி பெயரை சொல்லி திட்டிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
English Summary
Vellore anaikattu DMK vs VCK Poster