வீரப்பனின் 17 ஆவது வருட நினைவு தினம்... நினைவிடத்தில் குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை.! - Seithipunal
Seithipunal


வீரப்பனின் 17 ஆவது வருட நினைவு தினத்தன்று, குடும்பத்தினர் அவரின் நினைவிடத்திற்கு சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக - கர்நாடக எல்லையில், தமிழக - கர்நாடக காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த வீரப்பன், கடந்த 2004 ஆம் வருடம் அக். 18 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிரடிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, வீரப்பனின் உடல் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரை அடுத்துள்ள மூலக்காட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் நினைவிடத்தில் வருடம்தோறும் வீரப்பனின் குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில், 18 அக்.2021 ஆம் தேதியான இன்று வீரப்பனின் 17 ஆவது வருட நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டம் கூட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், வீரப்பனின் குடும்பத்தினரின் முக்கியமானவர்கள் மட்டும் மூலக்காட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. 

மேலும், வெளியூரில் இருந்து வருபவர்களை தடுக்கும் பொருட்டு, மூலக்காடு வரும் 7 இடங்களில் காவல் துறையினர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரப்பனின் குடும்பத்தினர் வீரப்பனின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தி வீரப்பனாரை வழிபட்டனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Veerappan 17 th Year Memorial Day Today 18 Oct 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->