ஜெயலலிதா, அதிமுகவுக்கு துரோகம் - எடப்பாடி பழனிச்சாமி மீது பாயும் திமுக கூட்டணி கட்சி! - Seithipunal
Seithipunal


ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பணம், படை பலத்தை கொண்டு பரிசுகளை அள்ளிக்கொடுத்து போலி வெற்றியை பெற திமுக முயற்சிக்கும். இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், விசிக்கவை சேர்ந்த வன்னியரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அதிமுக ஒரு மாநில கட்சி மட்டுல்ல; மாநிலத்தில் திமுக போன்றே வாக்கு வங்கி அதிகம் கொண்ட கட்சி. 

நடைபெறப்போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். 

தமிழ்நாட்டில் இதற்கு முன் அதாவது, 2009 ஆண்டு நடைப்பெற்ற தொண்டாமுத்தூர், பர்கூர், கம்பம், இளையான்குடி, ஶ்ரீவைகுண்டம் ஆகிய  5 தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.

ஆனால்,அடுத்து வந்த திருச்செந்தூர்,வந்தவாசி தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் பங்கேற்பதாகவும் இனி இடைத்தேர்தல்களை புறக்கணிக்க மாட்டோம் எனவும் அம்மையார் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால், ஜெயலலிதா வழியில் நடப்பதாக சொல்லும் திரு.எடப்பாடியார் அவர்கள் அம்மையாருக்கு எதிரான முடிவை எடுத்து மீண்டும் அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளார்" என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Vanniyarasu Condemn to ADMK and EPS


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->