ஃபிபா உலகக் கோப்பை; கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் போர்ச்சுகல் அணி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 41 வயது நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.

வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் இந்த தொடர், 39 நாட்கள் நடைபெறும். இந்த தொடரில் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ஆம் தேதி வரையில் நடைபெறும். நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 03 வரை நடைபெறும். காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 04 முதல் 11-ஆம் தேதியில்  நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறவுள்ளது.

நடப்பு நேஷன்ஸ் லீக் சம்பியனான போர்ச்சுகல் அணி, குரூப்-‘கே’வில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் காங்கோ, கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் உள்ளன. இந்த தொடரில் காங்கோ உடன் வரும் ஜூன் 17-ஆம் தேதி அன்று போர்ச்சுகல் அணி விளையாடவுள்ளது.

அடுத்து, ஜூன் 23 - உஸ்பெகிஸ்தான், ஜூன் 27 - கொலம்பியா அணிகளை போர்ச்சுகல் எதிர்கொள்கிறது. ஆறாவது முறையாக ரொனால்டோ, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறார். போர்ச்சுகல் அணி இதுவரை உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், அதிகபட்சமாக மூன்றாம் இடத்தை அந்த அணி இந்த தொடரில் பிடித்துள்ளது.

போர்ச்சுகல் அணி விவரம்:

கோல்கீப்பர்கள்:

டியோகோ கோஸ்டா, ஜோஸ் சா, ரூய் சில்வா, ரிக்கார்டோ வெல்ஹோ

டிஃபெண்டர்கள்:

டியோகோ டலோட், மேதியஸ் நூன்ஸ், நெல்சன் செமெடோ, ஜோவா கேன்செலோ, நுனோ மென்டிஸ், கோன்கலோ இனாசியோ, ரெனாடோ வீகா, ரூபன் டயஸ், தாமஸ் அராஜுவோ

மிட்ஃபீல்டர்கள்:

ரூபன் நெவ்ஸ், ஜோவா நெவ்ஸ், விட்டின்ஹா, புருனோ பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா, ஜோவா பெலிக்ஸ், பிரான்சிஸ்கோ டிரின்காவோ, பிரான்சிஸ்கோ கன்சிகாவோ, சாமு கோஸ்டா

முன்கள வீரர்கள்:

பெட்ரோ நெட்டோ, ரஃபேல் லியோ, கோன்கலோ குடெஸ், கோன்கலோ ராமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Portugal Squad Announced Led by Cristiano Ronaldo


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->