''நீட் தேர்வு முறை என்பது கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கு எதிரானது''; அமைச்சர் அருண்ராஜ்..! - Seithipunal
Seithipunal


''நீட் வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்'' என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதுகுறித்து கூறியாதவது;

மருந்து விற்பனையாளர்கள் நாளை (மே-20) கடையடைப்பு அறிவித்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழகம் முழுவதும் 50,000 மருந்தகங்கள் உள்ள நிலையில் 5,000 கடைகள் நாளை (மே-20) இயங்கும் என்றும், நாளை கடைகள் மூடப்பட்டாலும் உயிர் காக்கும் மருந்துக்கு தட்டுப்பாடு இருக்காது என்று அறிவித்துள்ளார்.

மேலும், மருந்துக் கடைகாரர்களின் கோரிக்கை ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதைத் தவிர தேவைப்படும் மருந்துகளும் வாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய மெடிக்கல் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அவசர கால மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், நாளை முதல் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக அருண்ராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீட் தேர்வு முறை என்பது கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், நீட் வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். போதைப் பொருளை தடுக்க தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Arunraj stated that the NEET examination system is detrimental to rural students and State rights


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->