திமுக அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் திருமாவளவன்! அடுத்தடுத்து பேட்டி, அதிரவைக்கும் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, பெரியார் பிறந்த நாளில் மிகப்பெரிய மகளிர் மாநாடு நடத்த உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் தெரிவிக்கையில், "கள்ளச்சாராயம், விஷச்சாராயம் குடித்து உயிரிழப்பது நாடு முழுவதுமே உள்ளது. இதற்கு ஒரே தீர்வு பூரண மதுவிலக்கு மட்டுமே. 

தேசிய அளவில் இந்த மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். டாஸ்மார்க் மது கடைகளாலும் பாதிப்பு உள்ளது. மெத்தனால் மாஃபியா கும்பலை கண்டுபிடித்து தமிழக அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். 

தற்போது சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா நல்லது தான், ஆனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதே இதற்கு தீர்வாக அமையும். 

கள்ளுக்கடைகள் திறப்பதன் மூலம் கள்ளச்சாராய சாவுகள் தடுக்கப்படுமா என்றால் கேள்விக்குறி தான். மகாத்மா காந்தி அடிகள் கள் உட்பட எந்த மதுவும் வேண்டாம் என்று தான் கூறினார். 

எனவே, தமிழக அரசு படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளக்குறிச்சிக்கு நான் நேரில் சென்ற போது அங்குள்ள மக்கள் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர். எனவே தமிழக முதல்வர் டாஸ்மார்க் கடைகளை மூடினால், மக்களிடம் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் உண்டாகும்.

கள் விற்பனை, டாஸ்மார்க் மூலம் மது விற்பனை உட்பட எந்த மதுவும் தமிழகத்திற்கு தேவையில்லை. பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பூரண மதுவிலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாளில் மிகப்பெரிய மகளிர் மாநாடு நடைபெற உள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 'தமிழகத்தில் தற்போதைய நிலைமைக்கு பூரண மதுவிலக்கு வாய்ப்பில்லை' என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து டாஸ்மார்க் கடைகளை மூடி, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று, அடுத்தடுத்த அறிவிப்புகளையும், பேட்டிகளையும் கொடுத்து வருவது தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan Say About TASMAC and Liquor Ban in TN


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->