ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - திருமாவளவன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அவரின் வீடு அருகேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் எட்டு பேர் சரணடைந்துள்ளனர். 

கடந்த 8 மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி புன்னை பாலா உள்ளிட்ட எட்டு பேர் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காரணமாக மருத்துவமனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரின் ஆதரவாளர்களையும் போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்.  

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நேரில் பார்த்த பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவிக்கையில், "கட்சி அலுவலக வளாகத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கொலை சம்பவத்தில் சரணடைந்துள்ள எட்டு பேர் மட்டும் இந்த கொலைக்கு காரணம் இல்லை. உண்மையான குற்றவாளிகளை தமிழக போலீசார் உடனடியாக தீவிர விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். 

இந்த கொலைக்கு தூண்டுதல்ல தூண்டுதலாக இருந்தவர்கள், கொலையை செய்ய சொன்னவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். எட்டு பேர் சரண் அடைந்து விட்டார்கள் வழக்கை முடித்து விடலாம் என்று போலீசார் அலட்சியம் காட்டக்கூடாது.

பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு இருக்கிறார். அதனால் அவருக்கு ஆங்காங்கே பகையாளிகள் இருந்துள்ளனர். இந்த விஷயம் காவல்துறைக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு உரிய பாதுகாப்பை போலீசார் வழங்கி இருக்க வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Thirumavalavan say about BSP Armstrong hacked to death


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->