மரண தண்டனை, என்கவுண்டர்கள் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு.., சசிகலா கேட்பது உரிமை - வி.சி.க திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


மரண தண்டனை மற்றும் என்கவுண்டர்கள் போன்றவை கூடாது என்பதே வி.சி.கவின் நிலைப்பாடு. சசிகலா தலைவர்களின் சமாதிக்கு செல்ல கேட்டகப்பட்டுள்ள அனுமதி அவரின் உரிமை என்று திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், "உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் சார்பில் 43 ஒன்றிய கவுன்சிலர்கள், 4 மாவட்ட கவுன்சிலர்கள் ஆகிய இடங்களில் போட்டியிட்டோம். இவற்றில் 27 ஒன்றிய கவுன்சிலர் இடம், 3 மாவட்ட கவுன்சிலர் இடம் வெற்றி அடைந்துள்ளோம். வி.சி.கவை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

பாரதிய ஜனதா கட்சியும், சங் பரிவார் இயக்கமும் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் சமூக நீதியை ஆதரிப்பது போல பேசினாலும், மறுபுறம் அதனை சவக்குழிக்குள் அடைக்க நடவடிக்கை எடுக்கிறது. இது அவர்களின் இரட்டை வேடம். இதனை எதிர்க்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். வரும் 2024 ஆம் வருட தேர்தலில் மீண்டும் பாஜக இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க வேண்டும். 

விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து, விஜய் அரசியலில் வருவதற்கு ஒத்திகை செய்கிறார் என்று கூற முடியாது. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அதிமுக கட்சிக்கு வலிமையான தலைமை இல்லை. பாஜகவை சார்ந்து இயங்கி வருகிறது. ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவில் இருந்த கட்டுக்கோப்பு தற்போது இல்லை. 

சசிகலா அரசியலில் இருந்து விலகிவிட்டதாக கூறி மீண்டும் அரசியலுக்கு வந்தால், நாம் அதனை விமர்சிக்க இயலாது. அரசியலுக்கு சசிகலா வர விரும்பினால் அதனை நிராகரிக்கவும் முடியாது. தலைவர்களின் சமாதிக்கு செல்ல கேட்டகப்பட்டுள்ள அனுமதி அவரின் உரிமை. அவரை தடுக்க கூடாது. அனுமதி வழங்க வேண்டும். 

மரண தண்டனை மற்றும் என்கவுண்டர்கள் போன்றவை கூடாது என்பதே வி.சி.கவின் நிலைப்பாடு. சட்டரீதியாக தண்டனை வழங்குவது சரியான முறை. காந்தியின் முக்கிய கோரிக்கையில் ஒன்றான மதுவிலக்கை திமுக நடைமுறைப்படுத்த வேண்டும். மதுவிலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த, ஆளும் பாஜக சட்டத்தை கொண்டு வர வேண்டும்" என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan MP Pressmeet at Trichy 15 Oct 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal