சட்டசபையில் தோல்வியடைந்த விசிக தீர்மானம் - திமுக எம்.எல்.ஏக்களால் திருப்பம்.!!  
                                    
                                    
                                   vck resolution fail in tn assembly
 
                                 
                               
                                
                                      
                                            நேற்று சட்டசபையில் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதா, ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அதில் விடுதலைச் சிறுத்தை கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி திருத்தம் கோரினார். அதாவது, ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்பதை இரண்டு எம்.எல்.ஏ.க்கள் என்று மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக தெரிவித்தார். 

அதனை அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் வழிமொழிந்தார். அதன் பின்னர் அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார். ஆனால், அந்த தீர்மானத்தை எந்தக் கட்சியினருமே ஆதரிக்கவில்லை. 
இதைத் தொடர்ந்து அந்த தீர்மானத்தை எதிர்ப்போர் யார் யார்? என்று சபாநாயகர் கேட்டபோது, திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே எதிர்த்து வாக்களித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       vck resolution fail in tn assembly