'தங்க மோதிரத் திட்டம்' மறுபரிசீலனை செய்ய திருமாவளவன் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசையும், முதல்வர் சி. ஜோசப் விஜய்யையும் முகநூல் மற்றும் எக்ஸ் (X) தளப் பதிவுகளின் வாயிலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு மற்றும் தவெக அரசின் அண்மைக்கால கொள்கை முடிவுகள் குறித்து விசிக சார்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்யும் தொனியில் பேசியதாகத் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். "கட்சி மேடைகளில் பேசும்போதுகூடத் தவிர்க்க வேண்டிய இத்தகைய ஏளனப் பேச்சு, நாட்டின் மிக உயரிய 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்பிற்கு உகந்தது அல்ல. இனிவரும் காலங்களிலாவது பேரவையின் மரபையும், முதல்வர் பதவியின் மகத்துவத்தையும் விஜய் பேணிப் பாதுகாக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மைப் பணி தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் (Outsourcing) ஒப்படைக்கத் தவெக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு விசிக தன் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. "கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் ஒருசில மண்டலங்களில் மட்டும் இம்முயற்சி நடந்தபோது விசிக உள்ளிட்ட கட்சிகள் போராடி அதனைத் தடுத்தன. தற்போது அதனை மாநிலம் முழுவதும் விரிவாக்குவது ஏற்பத்தக்கதல்ல. தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருதி இந்த டெண்டர் நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

'தங்க மோதிரத் திட்டம்' மறுபரிசீலனை கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் புதிய திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 755 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு விசிக கோரியுள்ளது. இதுகுறித்துத் திருமாவளவன் விடுத்துள்ள விளக்கத்தில் பின்வரும் முக்கியக் காரணங்களை முன்வைத்துள்ளார்:

உள்கட்டமைப்பு மேம்பாடு: தமிழகத்தில் 44 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணத்தில் நடக்கின்றன. ஏழைக் குடும்பங்கள் கூடத் தாய்-சேய் பாதுகாப்புக்காகவே தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். எனவே, இந்த ரூ. 755 கோடியைத் தங்க மோதிரத்திற்குச் செலவிடுவதை விட, அரசு மருத்துவமனைகளில் அதிநவீன 'பிரசவம் மற்றும் மகப்பேறு வார்டுகளை' உருவாக்கி, கூடுதல் மருத்துவப் பணியாளர்களை நியமிக்கப் பயன்படுத்தலாம்.

பயனற்றத் தன்மை: குழந்தைகளுக்குப் போடப்படும் சிறிய தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அவர்களின் கைகளுக்குப் பொருந்தாமல் போய்விடும் என்பதால், இத்திட்டம் நீண்டகாலப் பலனைத் தராது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று விசிக தன் அறிக்கையின் வாயிலாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Chief Thirumavalavan Urges TVK Govt to Protect Assembly Decorum and Reconsider Key Policies


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->