யாருக்காக... இது யாருக்காக..!! டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது வசந்த மாளிகை.!!  - Seithipunal
Seithipunal


நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் கர்ணன்., வீரபாண்டிய கட்டபொம்மன்., ராஜபார்ட் ரங்கதுரை., சிவகாமியின் செல்வன்., திருவிளையாடல்., பாசமலர் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களுக்காக டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலமாக புதுப்பிக்கப்பட்டு., திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்டது. 

திரையிடப்பட்ட அனைத்து படங்களும் நல்ல வசூல் செய்திருந்த நிலையில்., தற்போது விரைவில் வசந்தமாளிகை திரைப்படமும் வெளியாகவுள்ளது. வசந்தமாளிகை திரைப்படமானது தெலுங்கு மொழியில் நடிகர் நாகேஷ்வரராவ் நடித்து பிரேம் நகர் என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தை தமிழ் மொழியில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி., தமிழில் நடிப்பதற்கு நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் நடிகை வாணீஸ்ரீ நடித்து பின்னர் வசந்தமாளிகையாக தமிழில் வலம்வந்து. இந்த பாதை இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கியிருந்த நிலையில்., கடந்த 1972 ம் வருடத்தில் திரைக்கு வந்த இந்த திரைப்படமானது சுமார் 25 வாரங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனையை புரிந்திருந்தது. தமிழகம் மட்டுமல்லாது இலங்கையிலும் அதிக நாட்கள் இந்த படம் ஓடி வெற்றி கண்டது. 

தமிழில் வெளியான முதல் காதல் திரைப்படம் மற்றும் காதலில் தோல்வியடைந்த நபர்களுக்கான தாடி வளர்க்கும் பழக்கம் என்றும்., நடிகை  வாணீஸ்ரீயின் கூந்தலின் அழகிய தோற்றம்., வசந்த மாளிகையின் யாருக்காக பாடல்., குடிமகனே பாடல்., ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடல் என்று அனைத்து பாடலும் பயங்கரமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. 

இந்த திரைப்படத்தை தற்போது இயக்குனர் வி.சி.குகநாதன் திரையின் மூலமாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றியமைத்து., ஒளி மட்டும் ஒலியமைப்பை இப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றப்பட்டு., விரைவில் திரையில் வெளியிடுவதற்கு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vasantha maligai MOVIE RE RELEASE BY DIGITAL TECHNOLOGY


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->