பள்ளி .கல்லூரிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகள்..வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய  மாவட்ட ஆட்சியர்!  - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி.கல்லூரிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பரிசு வழங்கி பாராட்டினார். 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 133 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு வாரமும்  நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 67600 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000/-இரண்டாம் பரிசு, 7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/- த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடுவட்டம் டி.ஆர் பஜார் பகுதியை சேர்ந்த கஜலட்சுமி என்பவர் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தார். இதனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆய்வு செய்து இன்றைய தினம் மேற்கண்ட நபருக்கு ரூ.7,000/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரத்தினையும், பிரதான் மந்திரி ஜன்ஜோதி ஆதிவாசி நியாய மகா அபியான் யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கட்டப்பட்ட 929 வீடுகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் (குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சந்திரசேகர்) வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிச்சாமி (நிலம்) மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Various competitions held between schools and colleges The district collector appreciated the winners by giving them prizes


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->