பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும்!! பங்காரு அடிகளாருக்கு வைரமுத்து புகழஞ்சலி!! - Seithipunal
Seithipunal


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சுமார் அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறப்பாக ஆதிபராசக்தி பீடத்தை நடத்தி கல்வி, மருத்துவம் என பல்வேறு சேவைகளையும் மக்களுக்கு வழங்கியவர் பங்காரு அடிகளார். 

அவரின் பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் கருவறைக்குள் சென்று பெண்களும் வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை முன்னெடுத்தவர்.

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாடல் ஆசிரியர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் "சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர், அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர், இறுகிக் கிடந்த ஆன்மிக முடிச்சுகளைத் தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர்.

சமயப் பொதுவுடைமையாளர் பங்காரு அடிகளார் மறைவால் துயரமுறும் அத்துணை இதயங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vairamuthu condole Bangaru Adigalar death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->