சிலரது தூண்டுதலின் பேரில் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார் - வைகோ மகன் குழப்பமான பதில்! - Seithipunal
Seithipunal


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியலை கண்டித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரர் வைகோவிற்கு, அக்கட்சியின் அவை தலைவர் துரைசாமி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அவரின் அந்த கடிதத்தில், "குளித்தலையில் நானும், சிலரும் மதிமுகவை உடைக்க எண்ணியதாக நீங்கள் (வைகோ) பேசி உள்ளீர்கள். மதிமுக துவங்கப்பட்ட போது, வாரிசு அரசுக்கு எதிரான தங்களது பேச்சை உண்மை என நம்பி தோழர்கள் ஏமார்ந்து போய் உள்ளனர், தங்களது குழப்பமான அரசியல் நிலைப்பாட்டால் திமுகவிலிருந்து மதிமுகவிற்கு வந்தோர் மீண்டும் திமுகவிற்கே சென்று விட்டனர்.

தங்களின் சந்தர்ப்பவாத சுயநல அரசியலால் மதிமுகவின் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ள முன்வரவில்லை. நீங்கள் (வைகோ) உங்களின் குடும்ப மறுமலர்ச்சிக்காகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறீர். மதிமுகவை தாய் கட்சியான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், துரைசாமியின் இந்த கடிதத்திற்கு மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ பதில் அளித்திள்ளார்.

அதில், மதிமுகவை திமுகவுடன் இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை முழுமையாக புறக்கணிக்க வேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை துரைசாமி பொதுவெளியில் வெளியிடுவது முறை அல்ல என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயக உரிமைப்படி அவைத் தலைவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் என்றும், இது குறித்து கட்சி பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், அவைத் தலைவர் துரைசாமி சிலரது தூண்டுதலின் பேரில் கடிதம் எழுதி உள்ளதாகவும் துரை வைகோ விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko son Durai Reply for Duraisami


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->