அமெரிக்காவின் வரி உயர்வு! தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு- மு.க.ஸ்டாலின்!
US tax hike Tamil Nadu exports severely affected MK Stalin
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி காரணமாக திருப்பூரின் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
“இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50% வரிவிதிப்பால், திருப்பூரில் ஏற்றுமதி தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் சுமார் ரூ.3,000 கோடி அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் நலனைக் காக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது தொழில்கள், தொழிலாளர்களை பாதுகாக்க, உடனடி நிவாரண நடவடிக்கைகளையும், கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூரின் ஜவுளி ஏற்றுமதி, இந்தியாவின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் தற்போது கவனமாக பார்க்கப்படுகிறது.
English Summary
US tax hike Tamil Nadu exports severely affected MK Stalin