என்.ஆர். காங்கிரஸ்- பிஜேபி ஆட்சியில் வரலாறு காணாத ஊழல் .. இந்தியா கூட்டணி கட்சிகள் புகார்!
Unprecedented corruption in NR Congress BJP regime India s allies complain
என்.ஆர். காங்கிரஸ்- பிஜேபி ஆட்சியில் வரலாறு காணாத ஊழல் நடந்துள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் துணைநிலை ஆளுநர் கைலாசநாத னிடம் புகார் புகார் அளித்தனர்.
இதுகுறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:உயர் அதிகாரிகள் ஊழல் மற்றும் கைதுகள் பதிவு துறையில் தலைமை பதிவாளர் கைது மற்றும் சிறையில் அடைப்புநில அளவு துறை இயக்குனர் கைது மற்றும் சிறையில் அடைப்புபதிவுத்துறையின் செட்டில்மெண்ட் அதிகாரி கைது சிறையில் அடைப்பு காரைக்கால் துணை ஆட்சியர் கைது சிறையில் அடைப்பு
காரைக்கால் துணைப்பதிவாளர், வில்லியனூர் துணைப்பதிவாளர், உழவர்கரை துணை பதிவாளர் ஆகியோர் கைது சிறையில் அடைப்பு பொதுப்பணித்துறையில் மெகா ஊழல். பொதுப்பணி துறை (PWD) தலைமை பொறியாளர் கைது சிறையில் அடைப்பு. பொதுப்பணி துறையில் சுமார் 600 கோடி மதிப்பில்லான பணி ஒப்பந்தங்கள் 30% கமிஷன் - பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகளால் பிடிபட்டார்.
குற்றப்புலனாய்வில் ஆட்சியில் உள்ள யார் யாருக்கு பங்கு சேர்ந்தது என்கின்ற விவரங்கள் கைப்பற்றப்பட்டன. கோவில் சொத்துக்கள் சூறையாடல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் - கோவில்களின் சொத்துக்கள் நில ஆக்கிரமிப்பு செய்து சூறையாடப்படுகின்றன.காரைக்கால் பார்தீஸ்வரர் கோவில் புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலம் மற்றும் சில கோவில்களின் நிலங்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களில் சொத்துக்களின் மதிப்பு மற்றும் நகைகள், பணங்கள், இருப்புத் தொகைகள், வைப்புத் தொகைகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வேண்டும். மின்சாரம் தனியார் மயம்
மின்சாரம் தனியார் மையம் அரசின் முடிவு கைவிடப்படவில்லை. மின் கட்டண உயர்வு குறைக்கப்படவில்லை. மின்சார கட்டணத்திற்கு மானியத்தின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் கைவிடப்படவில்லை
புதிய கல்விக் கொள்கை புதுச்சேரி மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை அமலாகப்படுவதால் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போதும் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஆசிரியர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் புரியவில்லை. மாணவர்களுக்கு சுத்தமாக புரியவில்லை. இதனால் தேர்வு முறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மும்மொழி கொள்கையாலும் இந்தி திணிப்பு அமுல் ஆகிறது. பொதுவாக புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ரேஷன் கடை திறப்பு இல்லை
அரசு அறிவித்தபடி ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. 800 ரேஷன் கடைகளில் 20 ரேஷன் கடைகள் தான் திறக்கப்பட்டு இருக்கின்றன. அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் இலவச அரிசியும் சேர்த்து வழங்கக்கூடிய பொது விநியோக திட்டம் துவக்குவதற்கு இந்த அரசுக்கு எண்ணம் இல்லை.
சிறப்பு கூறு நிதி திட்டம்
தலித் சமுதாய மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற சிறப்பு கூறு நிதி திட்டம் முழுமையாக செலவிடப்படாமல் மத்திய அரசின் தொகுப்பிற்கு திருப்பி அனுப்பப்படும் அநீதி உள்ளது.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்
M.N.R.E.G.A. 100 நாள் வேலை திட்டம் முழுமையாக நடைபெறவில்லை. போதிய நிதி ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படவில்லை. சம்பள பாக்கி பிரச்சனைகள்
அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு சம்பள பாக்கி இருப்பதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
ஜவுளி பூங்கா மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சி தேவை
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள மூடி கிடக்கும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு கரசூரில் உள்ள 800 ஏக்கர் தொழிற்பேட்டை செயல்பாட்டுக்கு வர வேண்டும் ஏஎப்டி- பாரதி, சுதேசி பஞ்சாலைகள் இடத்தில் ஜவுளி பூங்கா கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட பல்வேறு உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் வரவேண்டும்.
மதுபான தொழிற்சாலை வேண்டாம்
புதுச்சேரிக்கு குடிநீர் அபாயத்தை ஏற்படுத்தும், விவசாயத்தை முற்றிலும் சீரழிக்க கூடிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
மாநிலத் தகுதி
ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநில அரசின் நிதி நெருக்கடி தீர்க்கப்படவும் மக்கள் நல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரவும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும், புதுச்சேரி பொருளாதாரத்தை வளர்க்கவும் மாநில அந்தஸ்துக்கான உறுதியான நடவடிக்கையும், முயற்சியும் தேவை.
சென்டாக் N.R.I. கோட்டா ஊழல்
சென்டாக் (CENTAC) மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள்
N.R.I கோட்டாவில் மாபெரும் ஊழல் லாஸ்பேட்டை காவல் நிலைய வழக்கு பதிவு மட்டும் போதாது சிபிசிஐடி விசாரணை செய்து என்.ஆர்.ஐ. கோட்டா அபகரிப்பு செய்வோரை கண்டுபிடிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
புதுச்சேரியில் சர்வ சாதாரணமாக கொலைகள் நடக்கின்றன. ஒரு கொலையில்லாமல் மூன்று கொலைகள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. சமீபத்தில் நடந்த பிஜேபி பிரமுகர் கொலை, வில்லியனூரில் நடந்த பிஜேபி பிரமுகர் கொலை இந்த கொலைகளுக்கு பின்புலமாக நில ஆக்கிரமிப்பும், கஞ்சா விற்பனையும் சமூக விரோத குற்றங்களும் இருக்கின்றன. சமூக விரோத சக்திகள், ஆளும் கட்சி அரசியல்வாதிகள் நில வணிகம் செய்வோர் ஆகியோர் கூட்டாக செயல்படுகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தோல்வி மற்றும் ஊழல்
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பெரும் அளவு நிதி குறைக்கப்பட்டு விட்டது. ஏராளமான திட்டங்கள் கைவிடப்பட்டன. புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனம் புதுச்சேரி அரசின் மீது குற்றம் சுமத்துகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தரமானதாக போதிய வசதிகள் இல்லை. அண்ணா திடல் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பொதுவாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் தோல்விகளிலும், ஊழல்களிலும் முடிந்து இருக்கிறது என இந்தியா கூட்டணி கட்சிகள் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளது .
English Summary
Unprecedented corruption in NR Congress BJP regime India s allies complain