மழையில் அடித்து சென்ற விளைபொருட்களை காப்பாற்ற முயன்ற விவசாயி - மத்திய அமைச்சர் எடுத்த அதிரடி செயல்.!!
union minister sivaraj sing savukan compensation to farmer for tried save to crop in rain water
மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட விளைபொருட்களை காப்பாற்ற முயலும் விவசாயியின் செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
வைரலான அந்த வீடியோவில், விவசாயி கௌரவ் பன்வார் என்பவர், கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்கடலைகள் அடித்து செல்லப்படுவதை பார்த்து தனது வெறும் கைகளால் அதை காப்பாற்ற முயற்சி செய்த செயல் காண்போரை மனம் உருக வைத்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட விளைபொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
English Summary
union minister sivaraj sing savukan compensation to farmer for tried save to crop in rain water