நாகர்கோவிலில் ஒரே இடத்தில ஒன்று கூடி விளையாட்டுகளை செய்து காட்டி மாணவர்கள உலக சாதனை!
A world record made by students playing games together in one place in Nagercoil
நாகர்கோவிலில் 750 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்று கூடிபல்வேறு கலைகள் மற்றும் விளையாட்டுகளை 1மணி நேரம் 60 நொடிகள் தொடர்ந்து செய்து காட்டி கிரகாம் பால் உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனையாக இடம் பதித்தார்கள்.
நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு குமரி மின்னல் சிலம்பாலயத்தின் நிறுவனர் திரு மின்னல் M.சந்திரன் ஆசான், செயலாளர் C.விமல் பிரகாஷ் ஆசான் மற்றும் பொருளாளர் C.வினு பிரகாஷ் ஆசான் ஆகியோரின் தலைமையில் 750 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று கூடி நமது தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணத்தில் நமது தமிழர்களின் பல்வேறு கலைகள் மற்றும் விளையாட்டுகளை 1மணி நேரம் 60 நொடிகள் தொடர்ந்து செய்து காட்டி கிரகாம் பால் உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனையாக இடம் பதித்தார்கள்.

இதனை கிரகாம்பெல் நிறுவனத்தில் இருந்து P ஸ்ரீதர் மற்றும் P. மாரி செல்வம் ஆகியோர் பார்வையில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் திருமிகு DR.S. ஜெய கிருஷ்ணன் ( இந்திய பாரத் சேவக் சமாஜ் மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர்) மற்றும் MLA திருமிகு M.R. காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிலம்பம் மற்றும் பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் கலைகளை மீட்டெடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் சொற்பொழிவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
மேலும் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் அனைத்து ஆசன்மார்களுக்கும் பரிசுகளை வணங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.இதில் Dr . சிலம்பு சுரேஷ் Dr. ஆஷா திரு M.முத்துசரவணன் மற்றும் திரு R.ராஜன் இலவச விபத்து ஆம்புலன்ஸ் சேவை உரிமை யாளர் R.ராஜன் அவர் களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
English Summary
A world record made by students playing games together in one place in Nagercoil