பாட்டி வீட்டுக்கு மரியாதை இல்லையா..துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்!
Is there no respect for the grandmothers house The young man threatened by showing a gun
வாலாஜா அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் பாட்டி வீட்டுக்கு மரியாதை இல்லையா என ஆத்திரம் முற்றதால் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சாமி சிலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன் நிற்காததால் அவர் துப்பாக்கியை காட்டி விழா குழுவினரை மிரட்டினார். இந்நிலையில் துப்பாக்கியை பறிமுதல் செய்து வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில், திரௌபதி அம்மன் ஆலய திருவிழா ஊர்வலத்தில், அதிகாலை தனது பாட்டி வீட்டின் முன்பு சுவாமியை நிறுத்தாததால் பேரன் ஆத்திரம் அடைந்தார்.
பின்னர் அவர் துப்பாக்கியை எடுத்துக்காட்டி சுட்டுவிடுவேன் என்று ஊர்காரர்களை மிரட்டியிருக்கிறார். திருவான்மியூரை சேர்ந்த புவனேஸ்வரன்(20), விடுமுறைக்கு பாட்டி ஊருக்கு வந்த நிலையில், திருவிழா குழுவினரை ஏர்-கன் வைத்து மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில், வாலாஜாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
English Summary
Is there no respect for the grandmothers house The young man threatened by showing a gun