+2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை பாராட்டிய ஆசிரியர்கள்!
100 percent pass in the +2 public examinationTeachers congratulated the students
காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம்,காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 66 மாணவ மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 66 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி மேரி ஜெல்சியா 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி அனுமிதா 471 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவர் ஆன்றனி 466 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
இதேபோன்று +2 பொதுத் தேர்வில் 69 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 69 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ஸ்ரீஜா 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவன் ரினோ 557 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், மாணவி சகாய ஷெர்சியா 546 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் அருட்பணி சுஜின், தலைமை ஆசிரியை ரோஸ்லெட், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெலிக்ஸ்ராஜன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர் பாராட்டினர்
English Summary
100 percent pass in the +2 public examinationTeachers congratulated the students