இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை..! 
                                    
                                    
                                   257 people infected with corona in India
 
                                 
                               
                                
                                      
                                            ஆசியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது என்றும், இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன என்றும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், 257 பேரும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       257 people infected with corona in India