பிரபல நடிகையை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.!!
actor vishal marriage to actress sai dhanshika
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிரார் அவரை தான் காதலித்தும் வருகிறார் என்ற தகவல் வெளியானது.
நடிகை சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். தற்போது இவர் யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
actor vishal marriage to actress sai dhanshika