60 வயது பாட்டியின் கைவரிசை: பக்கத்துக்கு வீட்டு சுவர் ஏறி குதித்து, 20 சவரன் நகைகள், பணம் கொள்ளை: போலீசார் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் கடந்த 02 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அவருடைய வீட்டில் யாரும் இல்லை என தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சென்று கொள்ளையடித்துள்ளனர்.

வெளியில் சென்று வீடு திரும்பிய முனுசாமி, கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் உள்ளறையில் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.14 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளைடியத்துள்ளனர்.  இதுபற்றி முனுசாமி வாணியாம்பாடி கிராம போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

உடனடியாக தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பக்கத்து வீட்டில் இருந்த 60 வயது மூதாட்டி, முனுசாமி வீட்டில் யாரும் இல்லை என தெரிந்து கொண்டு, வீட்டின் சுவர் ஏறி குதித்து, உள்ளே சென்று 20 சவரன் நகைகள் மற்றும் 14 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளார்.

அத்துடன் கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து, ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் பணமும் பெற்றுள்ளார். பட்ட பகலில் நடந்த இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை போலீசார் கைது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

60 year old woman robbed of 20 pieces of jewelry and cash by jumping over the wall of a house next door


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->