தலைக்கேறிய போதையில் தள்ளாடிய நபர் செய்த அட்டகாசம்: இணையத்தில் வைரல்..!
Drunk drinker lifts no parking sign in Erode
நாட்டில் மதுபிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்கள் போதையில் செய்யும் அட்டகாசங்களை எண்ணில் அடங்காதவவை. அந்த வகையில் மதுபிரியர் ஒருவர் குடிபோதையில் 'நோ பார்க்கின்' பலகை தலையில் தூக்கி செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
குடிபோதையில் தங்களை மறந்து அவர்கள் பல சாகசங்கள் சில நேரங்களில் சிரிக்கும் படி இருந்தாலும் வெறுப்பையும் ஊட்டுகிறது. பல நேரங்களில் அது அவர்களுக்கும் அவர்களால் மற்றவர்களுக்கும் பிரச்சினையில் போய் முடிகின்றது. சில அநேரங்களில் இவ்வாறு மதுபிரியர்கள் செய்யும் அட்டகாசங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வீடியோக்களை அதிக பார்வையாளர்கள் ரசித்து பார்க்கின்றனர். பலர் கண்டனங்களும் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு கனி மார்க்கெட் முன்பு குடிபோதையில் ஒருவர் ரோட்டில் அங்குமிங்கும் தள்ளாடியபடி நடந்துள்ளார். பின்னர் அங்கு சாலையோரம் இருந்த வாகனம் நிறுத்தக்கூடாது (நோ பார்க்கிங்) என்ற அறிவிப்பு பலகையை தூக்கி கொண்டு தள்ளாடியபடி ரோட்டை கடந்து சென்றார். இந்த காட்சி தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Drunk drinker lifts no parking sign in Erode