கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு...! ஆட்சி சரி இல்லை என விமர்சிக்கும் அஸ்வத் நாராயணன்
Bengaluru reeling under heavy rains Ashwath Narayanan criticizes government for not being good
பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை கொட்டிய கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து தரையில் விழுந்தது. மேலும் குறிப்பாக ரெயில்வே பாலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறி தத்தளித்து நின்றது.

இதனால் வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியிலுள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது.கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சினத்து வருகின்றன. கட்டமைப்புகளுக்கான கோடிக்கணக்கில் செலவு செய்தபோதிலும், அதன் ரிசல்ட் ஜீரோவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அஷ்வத் நாராயண்:
இதுகுறித்து கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், மல்லேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ''அஷ்வத் நாராயண்'' தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,"நேற்றிரவு பெய்த மழை பெங்களூருவின் கட்டமைப்பு மட்டும் வெளிப்படுத்தவில்லை.
கடந்த 2 வருடங்களாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஏதும் செய்யவில்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜீரோ ரிசல்ட்தான்" என்று விமர்சித்துள்ளார்.
துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்:
இந்த மழை வெள்ளத்தில் பெங்களூரு தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவிக்கையில், "அதிகாரிளுடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருந்து கொண்டு இருக்கிறேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
எப்போதும் போல, சவால்களை எதிர்கொள்வதற்கும் நிவாரணத்தை உறுதி செய்வதற்கும் 24 மணி நேரமும் உழைத்து வருகிறேன்.இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புதியவை அல்ல. அவை பல ஆண்டுகளாக அரசாங்கங்கள் மற்றும் நிர்வாகங்களால் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இப்போது உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் - அவற்றைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். தற்காலிகத் தீர்வுகளுடன் அல்ல, நீண்டகால, நிலையான தீர்வுகளுடன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Bengaluru reeling under heavy rains Ashwath Narayanan criticizes government for not being good