உஷார் மக்களே!நாளை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகுது கனமழை...!
Be careful people Heavy rain is going to lash 12 districts Tamil Nadu tomorrow
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா நிருபர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அமுதா:
அதில் அவர் தெரிவித்ததாவது,"கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணப்பேட்டை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல்,கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது.இதில் தென்மேற்கு பருவமழை அடுத்த சில தினங்களில் வலுப்பெறும்.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக கூடும். இது, 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Be careful people Heavy rain is going to lash 12 districts Tamil Nadu tomorrow