ஐ.எஸ்.ஐ. பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கொடுத்த உ.பி தொழிலதிபர் கைது! அதிரவைக்கும் பின்னணி!
operation Sindoor UP Business man arrested NIA
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஷஷாத் என்பவரை, உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்ததையடுத்து, நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் லக்னெள சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ. என்ற பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் ஷஷாத், மொராதாபாத் அருகே கைது செய்யப்பட்டார்.
ராம்பூர் மாவட்டத்தில் உள்ள டன்டா பகுதியைச் சேர்ந்த அவர், இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் சட்டவிரோதமாக பொருள்களை கடத்துவதில் ஈடுபட்டு வந்தார் என தகவல்.
விசாரணையில், இந்தியாவில் உள்ள சிலரை பணம் கொடுத்து உளவுப் பணிக்குள் ஈடுபடுத்தியதும், பாகிஸ்தானில் வணிகம் செய்வது போலவே ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் முற்றிலும் இணைந்து செயல்பட்டதும் தெரியவந்தது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக ஆடைகள், அலங்காரப் பொருட்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை கடத்துவதோடு, அச்சுறுத்தலின் மூலமும் பலரை உளவுப் பணி செய்ய வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
English Summary
operation Sindoor UP Business man arrested NIA