ஐபிஎல் போட்டியில் ஹர்ஷல் படேல் வரலாற்று சாதனை; குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள்...!
Harshal Patel creates history in IPL 150 wickets in fewer balls
இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் 61-வது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்து. அணியின் சார்பாக மார்ஷ் 65 ரன்களும், எய்டன் மார்க்ரம் 61 ரன்களும் அடித்து அரை சத்தம் கடந்தனர். ஐதராபாத் தரப்பில் எஷன் மலிங்கா 02 விக்கெட்டுகளும், ஹர்ஷ் துபே, நிதிஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
-bl6wt.png)
இந்த ஆட்டத்தில் ஹர்ஷல் படேல் கைப்பற்றிய ஒரு விக்கெட் ஐ.பி.எல். தொடரில் அவரது 150-வது விக்கெட்டாக பதிவானது. இந்த 150 விக்கெட்டுகளை அவர் 2,381 பந்துகளில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
01. ஹர்ஷல் படேல் - 2,381 பந்துகள்
02. லசித் மலிங்கா - 2,444 பந்துகள்
03. சாஹல் - 2,543 பந்துகள்
04. பிராவோ - 2,656 பந்துகள்
05. பும்ரா 2,832 பந்துகள்
English Summary
Harshal Patel creates history in IPL 150 wickets in fewer balls