போலி வீடியோவில் மயங்கிய பெண்.. ரூ.3.75 கோடி பறித்த தில்லாலங்கடி கும்பல்!
Woman mesmerized by fake video Thillalangadi gang that stole Rs. 3.75 crores
ஜக்கி வாசுதேவ் பேசுவது போன்ற போலி வீடியோ வெளியிட்டு பெண்ணிடம் ரூ.3.75 கோடியை நூதன மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு சி.வி.ராமன்நகர் பகுதியில் 57 வயது பெண் தனது செல்போனில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜக்கி வாசுதேவ் பேசும் ஒரு வீடியோவை பார்த்தபோது அதில் தான் கூறியபடி முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாகவும், இதற்காக வீடியோவில் இருக்கும் லிங்கை கிளிக் செய்து இ-மெயில், செல்போன் எண்ணை பதிவிடும்படியும் பேசி இருந்தார்.
இதனை நம்பிய அந்த பெண் , லிங்கை கிளிக் செய்து இ-மெயில், செல்போன் எண்ணை பதிவிட்டார். அதன்பிறகு, 2 மர்மநபர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தாங்கள் கூறும்படி முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவரும் முதலில் குறைவான அளவே பணத்தை முதலீடு செய்திருந்தார்.
மேலும் மர்மநபர்கள் வற்புறுத்தலின் பேரில் ரூ.3.75 கோடியை அந்த பெண் முதலீடு செய்தார். ஆனால் லாபம் எதையும் மர்மநபர்கள் கொடுக்கவில்லை. இதனால் ரூ.3.75 கோடியை திரும்ப எடுக்க அப்பெண் முயன்றார். ஆனால் பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் போனபொது அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது தான் மர்மநபர்கள் தன்னிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
English Summary
Woman mesmerized by fake video Thillalangadi gang that stole Rs. 3.75 crores