அந்த மாநிலத்தின் முதல் ரெயில் பாதை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
The first railway line of that state was inaugurated by Prime Minister Modi
மிசோரம் மாநிலத்தின் முதல் ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
மோசமான வானிலை காரணமாக, விழா நடைபெறும் லம்முவால் மைதானத்திற்கு மோடி செல்ல முடியவில்லை. எனவே, ஐசாலை டெல்லியுடன் இணைக்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கினார்.
ரூ.8,070 கோடி மதிப்பிலான பைராபி–சாய்ராங் ரெயில் திட்டம் 2008-09ல் அங்கீகரிக்கப்பட்டு, 2015-ல் பணிகள் தொடங்கியது.
பாதையில் 45 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் உள்ளன. சாய்ராங் அருகே உள்ள பாலம் எண் 144, குதுப் மினாரை விட 114 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
மிசோரம் ரெயில்வே வலையமைப்பில் 4 முக்கிய நிலையங்கள்: ஹோர்டோகி, கான்புய், முவால்காங், சாய்ராங்.
மேலும், மோடி,
சாய்ராங்–டெல்லி (ஆனந்த் விஹார்) ராஜ்தானி எக்ஸ்பிரஸ்,
சாய்ராங்–கவுகாத்தி எக்ஸ்பிரஸ்,
சாய்ராங்–கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் தொடங்கி வைத்தார்.
இதனுடன், ரெயில்வே, சாலைகள், எரிசக்தி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
English Summary
The first railway line of that state was inaugurated by Prime Minister Modi