நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவலர்கள் அனுமதி மறுப்பு...! – இட வசதி காரணமா? அல்லது வேறு காரணமா..?
Police deny permission for Vijays campaign Nagai Is it because space Or some other reason
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கையில், தமிழக அரசியல் பரப்பில் பரபரப்பு உண்டாகியுள்ளது. இதில் பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

ஏற்கனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளில் த.வெ.க. கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்திய விஜய், இதில் பல லட்சக்கணக்கான இளைஞர்களை கவர்ந்து, தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, இன்று சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட விஜய், விமான நிலையத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உற்சாக வரவேற்பை பெற்றார்.மேலும், “வருங்கால முதல்வர் வாழ்க… தளபதி வாழ்க…” என்ற விண்ணதிர முழக்கங்கள் சந்து பொந்தெல்லாம் பாய்த்தது.
இதில் விஜய், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரசார வாகனத்தில் கையசைத்து தொண்டர்களுடன் சந்தித்துப் பிரசாரம் தொடங்கினார். இதன்பின் பெரம்பலூர் மற்றும் அரியலூரில் பிரசார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில், நாகை மாவட்ட அவுரித்திடலில் 20-ந்தேதி நடைபெறவிருக்கும் விஜய் பிரசாரத்திற்கு காவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.இதற்கு காரணம், அதே நாளில் தி.மு.க. கட்சி ஏற்கனவே கூட்டம் பதிவு செய்துள்ளதாலும், மாற்று இடங்களான நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகம் ஆகியவை இடவசதி போதாது உள்ளதாலும் அனுமதி மறுக்கப்பட்டது.
English Summary
Police deny permission for Vijays campaign Nagai Is it because space Or some other reason