கே.டிராமாக்களுக்கு குறிவைத்த வடகோரியா...! சர்வதிகாரத்தின் உச்சம்...!
North Korea targets K dramas height totalitarianism
மக்களை கொடுமை படுத்தி ஆட்சிகொள்ளும் சர்வாதிகாரமிக்க வட கொரியாவில் மக்கள் அன்றாட வாழ்க்கையை கூட அரசாங்கம் முழுமையாக கட்டுப்படுத்துகிறது. அது எப்படி முடி வெட்ட வேண்டும் முதல், தொலைக்காட்சியில் எதை பார்க்கலாம் என்பது வரையிலாகும்.
இதில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்கள், அதிலும் குறிப்பாக தென் கொரியாவின் கே-டிராமாக்கள், பார்க்கவோ பகிரவோ செய்தால், அங்கு சட்டப்படி மரண தண்டனை உண்டு என ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் ஆச்சரியகரமான தகவலாக தெரிவித்துள்ளது.

மேலும், ஜெனீவாவில் நேற்று வெளியான 14 பக்க அறிக்கையில், 2014 முதல் தற்போது வரை வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் நேர்காணல் செய்யப்பட்ட சாட்சியர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மேலும், புதிய தொழில்நுட்ப உதவியால் அரசு மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, தண்டனைகளை இன்னும் கடுமையாக மாற்றியுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, 2015க்கு பிறகு வந்த புதிய சட்டங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பெரிதும் வலுப்படுத்தியுள்ளன.
இதில் மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தபடி, "கோவிட்-19 காலத்துக்குப் பிறகு சாதாரண மற்றும் அரசியல் குற்றங்களுக்கு மரண தண்டனைகள் அதிகரித்துள்ளன.
மேலும், வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்கள் விநியோகிப்பதற்கான புதிய சட்டங்களுக்கு உட்பட்டு, ஏற்கனவே பலர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்"என்று தெரிவித்துள்ளார்.எனினும், வட கொரிய அரசு இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்து, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானத்தை எதிர்த்து நிலைபெற்றுள்ளது.
English Summary
North Korea targets K dramas height totalitarianism