மாலத்தீவில் புதிய திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்ட இந்தியா!
India has signed contracts for new projects in the Maldives
மாலத்தீவில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை இந்தியா மேற்கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான தீவுநாடான மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது.அதனை தொடர்ந்து, இரு தரப்பு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளர்ச்சியடைந்தது.மேலும் , மாலத்தீவுக்கு இந்தியா நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாலத்தீவில் படகு சேவை, போக்குவரத்து, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த இந்தியா 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. மாலத்தீவில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை இந்தியா மேற்கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாட்டு வெளியுறவுத்துறை மட்டத்தில் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
India has signed contracts for new projects in the Maldives